/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கவுரவ விரிவுரையாளர்கள் அமைச்சரிடம் மனு
/
கவுரவ விரிவுரையாளர்கள் அமைச்சரிடம் மனு
ADDED : ஏப் 14, 2025 06:48 AM
ஊட்டி : அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆட்சி மன்ற குழு சார்பில், உயர் கல்வித்துறை அமைச்சர்கோவி செழியனிடம் அளித்துள்ள கோரிக்கை மனு:
அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லுாரியில், 25 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் அடிப்படை வாழ்வாதாரம் காக்க, 20 ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர்.
கோரிக்கைகள் ஒன்று கூட மாநில அரசு நிறைவேற்றவில்லை. கொத்தடிமை போல, அரசும் உயர் கல்வி துறை அதிகாரிகள் வஞ்சித்து வருகின்றனர். கோரிக்கைகளை முன்வைத்து பல போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை இல்லை.
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் தொடர்பாக நீதிமன்ற தீர்ப்புகளில், கவுரவ விரிவுரையாளர்கள் வெற்றி பெற்றும் கோரிக்கை நிறைவேற்றப் படாமல் உள்ளது. எங்களது கோரிக்கைகளை சட்டசபையில் நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.