UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 04:45 PM

குன்னூர்: குன்னூர் ராணுவத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களை எம்.ஆர்.சி ., கமாண்டன்ட் பிரிகேடியர் கிருஷ்ணனேந்து தாஸ் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு பாராட்டி பரிசுகள் வழங்கினார்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் ராணுவ பகுதியில் உள்ள முருகன் கோவிலில், மெட்ராஸ் ரெஜிமென்ட் மையம் மற்றும் கன்டோன்மென்ட் பகுதிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடந்தது. தினந்தோறும் அர்ப்பணிப்புடன் தூய்மை பணியில் ஈடுபடும் இவர்களின் சேவை போற்றத்தக்கது எனக் கூறி, எம்.ஆர்.சி. கமாண்டன்ட் பிரிகேடியர் கிருஷ்ணேந்து தாஸ், 190 தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். தொடர்ந்து, அனைவருக்கும் மதிய உணவும் வழங்கப்பட்டது.
