UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 04:44 PM

ஊட்டி: ஊட்டியில் வெற்றி பயண திட்டத்தை கலெக்டர் துவக்கி வைத்தார்.
ஊட்டி பஸ் ஸ்டாண்டில் நடந்த பெண்களுக்கான வெற்றி பயணத்திட்டத்தை துவக்கி வைத்து கலெக்டர் லட்சுமி பவ்யா பேசியதாவது, ‘ இதுவரை மகளிர் 40 கி.மீ., தூரம் வரை, 11 நகர பஸ்களுடன், 39 பெருநகர் பஸ்கள் என மொத்தம், 99 புறநகர் பஸ்கள் என மொத்தம், 110 பஸ்கள் அனுமதிக்கப்பட்டு வந்தது.
இன்று (நேற்று) துவக்கி வைக்கப்பட்ட வெற்றி பயணம் திட்டத்தின் வாயிலாக, 40 கி.மீ., தூரத்திலிருந்து, 80 கி.மீ., தூரம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 71 பஸ்கள் சேர்க்கப்பட்டு, மொத்தம், 181 பஸ்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தொலைதூரம் இயக்கப்படும் பஸ்கள் மாவட்டத்திற்குள், ஏதாவது ஒரு இடத்திற்கு குருநடை இயக்கிய பின்பு, தொலைதூரம் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த குருநடைகளையும் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணம் மேற்கொள்ள உதவிடும் பொருட்டு, மேலும், 93 பஸ்கள் மாவட்டத்திற்குள் இயங்கும் நடைகளையும் சேர்த்து மகளிருக்காக கட்டணமில்லா பயணம் செய்ய வெற்றி பயண திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.’ என்றார்
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வாசுகி, ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் டினு அரவிந்த், போக்குவரத்து கழக மேலாளர் ஜெய்சங்கர், நகராட்சி கமிஷனர் தாமோதரன் மற்றும் தாசில்தார் சதீஸ்வர நாயக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
