தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/கணினி முறைக்கு மாற்றும் அரசாணை: தொழில்நுட்ப இயக்குனருக்கு மனு

கணினி முறைக்கு மாற்றும் அரசாணை: தொழில்நுட்ப இயக்குனருக்கு மனு

கணினி முறைக்கு மாற்றும் அரசாணை: தொழில்நுட்ப இயக்குனருக்கு மனு


UPDATED : அக் 03, 2026 12:00 AM

ADDED : அக் 02, 2026 03:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 12:00 AM ADDED : அக் 02, 2026 03:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: தமிழ்நாடு தட்டச்சு பயிற்சி நிலையங்கள் சங்க மாநில தலைவர் சுரேஷ்குமார் அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்குனருக்கு அனுப்பிய மனு :

கையேடு தட்டச்சு இயந்திரம் சார்ந்த, தட்டச்சு பயிற்சி நிலைய தேர்வுகளை கணினி வழிமுறைக்கு மாற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால் மாநிலம் முழுவதும் அரசு அங்கீகரிக்கப்பட்ட, 5,000 தட்டச்சு பயிற்சி நிலையங்கள் மற்றும் பணியாளர்களின் வேலை வாய்ப்பு, வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.

மேலும், முறைகேடு தடுப்பு குழு விசாரணை கையாளப்படும் விதம், மறுமதிப்பீட்டு வசதி நீக்கம்,தேர்வு பணி ஊதியம் வழங்குவதில் தாமதம் மற்றும் தேர்வர்களுக்கு வெகு தொலைவில் தேர்வு மையங்களை அமைத்தல் போன்ற பல்வேறு குறைபாடுகள் உள்ளன.

இந்தக் குறைபாடுகள் காரணமாக தட்டச்சு சங்கத்தினர் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். எனவே , தட்டச்சு தேர்வுகளை படிப்படியாக கணினி முறைக்கு மாற்றும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை , 187 யை ரத்து செய்ய வேண்டும். கையேடு தட்டச்சு இயந்திர முறையிலேயே தேர்வுகளை தொடர்ந்து நடத்த வேண்டும். இவ்வாறு , அதில் கூறப்பட்டுள்ளது

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us