/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வேட்டை கருப்பசாமி கோவில் திருவிழாவில் குதிரை ஓட்டம்
/
வேட்டை கருப்பசாமி கோவில் திருவிழாவில் குதிரை ஓட்டம்
வேட்டை கருப்பசாமி கோவில் திருவிழாவில் குதிரை ஓட்டம்
வேட்டை கருப்பசாமி கோவில் திருவிழாவில் குதிரை ஓட்டம்
ADDED : ஏப் 27, 2025 09:28 PM

பாலக்காடு : தத்தமங்கலம், வேட்டை கருப்பசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு நடந்த குதிரை ஓட்டம் வெகு விமர்சியாக நடந்தது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் தத்தமங்கலத்தில் உள்ளது வேட்டை கருப்பசாமி கோவில். இங்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சித்திரை மாதம் 'அங்காடி வேலா' என்ற பெயரில் திருவிழா நடக்கிறது.
நடப்பாண்டு திருவிழாவுக்கு, கடந்த ஏப்., 19ம் தேதி அர்ச்சகர் நாராயணனின் தலைமையில் பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றப்பட்டது. திருவிழாவையொட்டி குதிரை ஓட்டம் வெகு விமர்சையாக நடந்தது.
மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும், தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட, சிறப்பு பயிற்சி பெற்ற குதிரைகள், இந்தக் குதிரை ஓட்டத்தில் கலந்து கொண்டன. மாலை, 3:00 மணிக்கு துவங்கி 6:00 மணி வரை நடந்த குதிரை ஓட்டத்தை  ஆயிரக்கணக்கானோர் கண்டு மகிழ்ந்தனர்.
மே மாதம், 3ம் தேதி சிறப்பு பூஜைகள், செண்டை மேளம் முழங்க யானைகள் அணிவகுப்பு, பஞ்சவாத்தியம், வானவேடிக்கை என பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

