/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தோட்டக்கலை பண்ணை செயல்பாடுகள் அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி
/
தோட்டக்கலை பண்ணை செயல்பாடுகள் அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி
தோட்டக்கலை பண்ணை செயல்பாடுகள் அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி
தோட்டக்கலை பண்ணை செயல்பாடுகள் அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி
ADDED : நவ 21, 2025 06:06 AM
கூடலுார்: கூடலுார், பொன்னுார் அரசு தோட்டக்கலை பண்ணை செயல்பாடுகள் குறித்து அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
கூடலுாரில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு, நாடுகாணி அருகே உள்ள பொன்னுார் தோட்டக்கலை பண்ணையில் பயிற்சி முகாம் நடந்தது. அதில், தேயிலை, காபி உள்ளிட்ட நாற்றுகள் உற்பத்தி குறித்து விளக்கப்பட்டது. முகாமுக்கு, கூடலுார் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ஐஸ்வர்யா தலைமை வகித்தார்.
பண்ணை மேலாளர் விஜயராஜ்,'தோட்டக்கலை பண்ணையின் செயல்பாடுகள்; நர்சரி அமைத்து தேயிலை, காபி, கிராம்பு, பட்டை, ஜாதிக்காய் நாற்றுகள் உற்பத்தி செய்யும் முறைகள்; இயற்கை உரங்களான பஞ்சகாவ்யா, தசகாவ்யா மற்றும் மண்புழு உரம் தயாரிக்கும் முறைகள்,' குறித்து விளக்கினார்.
முகாமில், வட்டார மேற்பார்வையாளர் சண்முகம், கல்வி சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் கருணாநிதி, ஆசிரியர்கள் மற்றும் 65 அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.