/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பந்தலுாரில் புதர்கள் சூழ்ந்த மருத்துவமனை வளாகம்
/
பந்தலுாரில் புதர்கள் சூழ்ந்த மருத்துவமனை வளாகம்
ADDED : ஜூலை 09, 2025 09:37 PM

பந்தலுார்; பந்தலுார் பஜாரில் தாலுகா அரசு தலைமை மருத்துவமனை அமைந்துள்ளது.
இங்கு போதிய கட்டட வசதிகள் இருந்தும், நோயாளிகள் பயன்பெற உபகரணங்கள் இல்லாததால் பெயரளவிற்கு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது.
புறநோயாளிகளில் சிறிய நோய்களுக்கு மட்டுமே இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்களுக்கு உணவு பொருட்கள் சப்ளை செய்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. மேலும், மருத்துவமனை முழுவதும் புதர்கள் சூழ்ந்து விஷ ஜந்துக்களின் வாழ்விடமாக மாறி வருகிறது.
மேலும், மருத்துவமனை கீழ்தளம், சித்தாபிரிவு, பிரேத பரிசோதனை அரங்கு உள்ளிட்ட பகுதிகளை சுற்றிலும் அதிக அளவில் புதர்கள் வளர்ந்து காணப்படுகிறது. மருத்துவமனை முகப்பு பகுதியில் உள்ள கழிவறை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவில் உள்ளது. இதனால், நோயாளிகள் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, மருத்துவமனை வளாகத்தை சுற்றிலும் புதரை அகற்றி, நோயாளிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.