/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஓட்டலில் பெண் குளிப்பதை 'வீடியோ' எடுத்த ஊழியர் கைது
/
ஓட்டலில் பெண் குளிப்பதை 'வீடியோ' எடுத்த ஊழியர் கைது
ஓட்டலில் பெண் குளிப்பதை 'வீடியோ' எடுத்த ஊழியர் கைது
ஓட்டலில் பெண் குளிப்பதை 'வீடியோ' எடுத்த ஊழியர் கைது
ADDED : ஆக 07, 2025 09:03 PM
ஊட்டி; பெண் சுற்றுலா பயணியர் குளித்ததை 'வீடியோ'எடுத்த ஓட்டல் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் ஊட்டிக்கு சுற்றுலா வந்தார். ஊட்டி நகரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கினர். இளம் பெண் குளித்துகொண்டிருந்த போது, திடீரென 'மொபைல்' போன் 'டார்ச்லைட்' வெளிச்சம் வந்துள்ளது.
அந்த அறையில் இருந்து சிறிய துளை வழியாக செல்போன் வாயிலாக யாரோ 'வீடியோ' எடுப்பது தெரியவந்தது. உடனே அவசர போலீஸ் உதவி எண்-100 யை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். தொடர்ந்து, அந்த பெண் உடனடியாக வேலை விஷயமாக வெளிநாடு செல்ல வேண்டி இருந்ததால், போன் வாயிலாக தகவல் தெரிவித்து விட்டு கிளம்பி விட்டார்.
ஊட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்.ஐ.,செந்தில் தலைமையிலான போலீசார், அந்த ஓட்டலுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி அங்கிருந்தவர்களின் மொபைல் போனை வாங்கி சோதனை செய்தனர்.
அதில், 'ஓட்டல் ரூம் பாயாக பணியாற்றி வந்த கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த நித்திஷ்,30, என்பவர் வீடியோ எடுத்ததும், இதேபோல், 5க்கும் மேற்பட்ட பெண்களை வீடியோ எடுத்தார்,' என்பது தெரியவந்தது. வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.