/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
படகு இல்ல ஏரியில் ஓட்டல் ஊழியர் தற்கொலை
/
படகு இல்ல ஏரியில் ஓட்டல் ஊழியர் தற்கொலை
ADDED : பிப் 10, 2025 06:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி, : ஊட்டி படகு இல்ல ஏரியில் ஓட்டல் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
ஊட்டி படகு இல்ல ஏரியில் முதியவர் ஒருவர் பிணமாக மிதப்பதாக, ஊட்டி ஜி1 போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி, விசாரணை நடத்தினர்.
அதில், ஊட்டி காந்தள் பகுதியை சேர்ந்த விஜயகுமார்,60, ஊட்டியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் பணியாற்றி வந்தது தெரியவந்தது.
தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.-----