/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மனித உரிமைகள் ஆணையம் நீலகிரி கலெக்டருக்கு 'நோட்டீஸ்'
/
மனித உரிமைகள் ஆணையம் நீலகிரி கலெக்டருக்கு 'நோட்டீஸ்'
மனித உரிமைகள் ஆணையம் நீலகிரி கலெக்டருக்கு 'நோட்டீஸ்'
மனித உரிமைகள் ஆணையம் நீலகிரி கலெக்டருக்கு 'நோட்டீஸ்'
ADDED : செப் 10, 2025 12:23 AM
சென்னை: 'நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில், சிதிலமடைந்து மிக மோசமான நிலையிலிருக்கும், துாய்மைப் பணியாளர்கள் குடியிருப்புகள் குறித்து, ஆறு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, நீலகிரி மாவட்ட கலெக்டருக்கு, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
கோத்தகிரியில் உள்ள, 'கேம்ப் லைன்' துாய்மைப் பணியாளர்கள் குடியிருப்பில், 50 குடும்பங்கள் வசிக்கின்றன.
அவை சிதிலமடைந்து, மிக மோசமான நிலையில், கொத்தடிமை கூடாரங்கள் போல் உள்ளன.
கழிப்பிட வசதி கூட இல்லை. வீட்டு சுவர்களில் விரிசல் ஏற்பட்டு, எப்போது வேண்டுமானாலும், இடிந்து விழும் நிலையில் உள்ளன' என, பத்திரிகைகளில் செய்தி வெளியானது.
அதன் அடிப்படையில் தாமாக முன்வந்து, வழக்குப் பதிந்து விசாரித்த, மாநில மனித உரிமைகள் ஆணையம், 'கோத்தகிரி துாய்மைப் பணியாளர் குடியிருப்பு மோசமான நிலையில் இருப்பது குறித்து, நீலகிரி கலெக்டர் ஆறு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டது.