/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீரோடை நடைபாலம் கட்ட நடக்கும் 'மனுப்போர்'; விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுத்தியும் பயனில்லை
/
நீரோடை நடைபாலம் கட்ட நடக்கும் 'மனுப்போர்'; விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுத்தியும் பயனில்லை
நீரோடை நடைபாலம் கட்ட நடக்கும் 'மனுப்போர்'; விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுத்தியும் பயனில்லை
நீரோடை நடைபாலம் கட்ட நடக்கும் 'மனுப்போர்'; விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுத்தியும் பயனில்லை
ADDED : பிப் 04, 2025 11:27 PM

குன்னுார்; குன்னுார் கோடேரி கிராமத்தில் நீரோடைக்கு நடைபாலம் அமைக்க, ஓராண்டிற்கும் மேல், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்கள் கொடுத்தும் பயனில்லை.
குன்னுார் அதிகரட்டி, 12வது வார்டு கோடேரியில் உள்ள நீரோடை, கடந்த, 2023ல் துார் வாரப்பட்டது. அகலம் அதிகரித்ததால், இதனை கடந்து விளைநிலங்களுக்கு செல்லவும், விளை பொருள்களை கொண்டு வரவும் விவசாயிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
இங்கு, மூன்று இடங்களில் நடைபாலங்கள் அமைத்து தர, கடந்த ஓராண்டிற்கு மேலாக மனுக்கள் அளித்தும், விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில், பல முறை தெரிவித்தும் தீர்வு கிடைக்காததால், குழாய்கள் வைத்து, அதன் மீது ஏறி நடந்து சென்று வரும் அவலம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
கடிதம் மட்டுமே... ஆய்வு இல்லை
கடந்த, 2023 டிச., 15ல் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பேரூராட்சி வார்டு உறுப்பினர் மனோகரன் அளித்த மனுவிற்கு, 'பாசன உப கோட்ட அரசு உதவி செயற் பொறியாளர், நீரோடையை கள ஆய்வு மேற்கொண்டு, மதிப்பீடு தயாரித்து உரிய நிதி ஒதுக்கீடு பெற்று, அடுத்த நிதியாண்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்,' என, பதில் வந்தது.
2024, அக். 2ல், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்கள் கேட்டதில், 'பாசன உபகோட்ட உதவி செயற்பொறியாளர் பொங்கியண்ணன் கள ஆய்வு மேற்கொள்வதாகவும், விரைவில் மதிப்பீடு தயாரித்து நிதி ஒதுக்கீடு கிடைக்க பெற்றதும் பணிகள் மேற்கொள்ளப்படும், ' என. தெரிவிக்கப்பட்டது. ஆனால், எந்த பயனும் இல்லை.
மனு அனுப்பிய மனோகரன் கூறுகையில்,''இந்த ஒரு திட்டத்திற்கு, 3 ஆண்டுகளாக போராடும் நிலையில், கடைசியாக, முதல்வரின் உதவி மையத்தை அணுகி போது, மனு நிராகரிக்கப்பட்டதாக தகவல் அளித்தனர். விவசாயிகள் அளிக்கும் மனுவின் மீது எந்த துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அறியாமலேயே இதுபோன்ற கூட்டங்கள் நடத்தப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
''எனவே, விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை தலைமை ஏற்று நடத்தும் மாவட்ட கலெக்டர், விவசாயிகள் அளிக்கும் மனுக்கள் எந்த துறைக்கு செல்கிறது என்பதை உறுதிபடுத்தவும், கோரிக்கையை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,''என்றார்.