வங்கதேச எல்லையில் ஊடுருவல் முயற்சி அதிகம்: மத்திய அரசு
வங்கதேச எல்லையில் ஊடுருவல் முயற்சி அதிகம்: மத்திய அரசு
ADDED : டிச 16, 2025 10:26 PM

புதுடில்லி: கடந்த 2014 ல் இந்திய வங்கதேச எல்லையில் 7,528 முறை ஊடுருவல் முயற்சி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய் லோக்சபாவில் அளித்த பதிலில் கூறியதாவது: கடந்த 2014 முதல் இந்திய வங்கதேச எல்லையில் அதிக எண்ணிக்கையில் ஊடுருவல் முயற்சி நடந்தது. 2024 வரை 7,528 ஊடுருவல் முயற்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் -425,மியான்மர் எல்லையில் -298,நேபாளம் மற்றும் பூடான் எல்லையில் தலா -157 ஊடுருவல் முயற்சி நடந்தது. இந்திய சீன எல்லையில் எதுவும் நடைபெறவில்லை.
2024 ம் ஆண்டில் மட்டும் இந்திய வங்கதேச எல்லையில் அதிகபட்சமாக 977 பேர் ஊடுருவ முயன்றனர். அடுத்த பாகிஸ்தான் எல்லையில் 41 பேர் ஊடுருவ முயன்றனர்.
கைது
2014 முதல் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றதாக ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
அதில்
வங்கதேசத்தை சேர்ந்த 18,851 பேரும்
பாகிஸ்தானை சேர்ந்த 556 பேரும்
மியான்மரைச் சேர்ந்த 1165 பேரும்
நேபாளம் மற்றும்பூடான் எல்லையில் 237 பேரும் அடங்குவர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும், இது குறித்த புள்ளி விவரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

