/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விவசாய நிதியுதவி திட்டம் பெற அடையாள எண் பதிவு அவசியம்; விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
/
விவசாய நிதியுதவி திட்டம் பெற அடையாள எண் பதிவு அவசியம்; விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
விவசாய நிதியுதவி திட்டம் பெற அடையாள எண் பதிவு அவசியம்; விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
விவசாய நிதியுதவி திட்டம் பெற அடையாள எண் பதிவு அவசியம்; விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
ADDED : ஜூன் 29, 2025 11:02 PM
ஊட்டி; 'பிரதமரின் விவசாய நிதி உதவித்தொகை உட்பட அரசு நலத்திட்ட உதவிகளை பெற விவசாயிகள், (இன்று) 30-ம் தேதிக்குள் தனித்துவ அடையாள எண்ணுக்கு பதிவு செய்ய வேண்டும்,' என, தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட்ட பலன்களை விவசாயிகள் பெறுவதற்கு, 'தங்களது நில உடமை விவரங்கள்; பயிர் சாகுபடி அறிக்கை,' போன்ற ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால், ஏற்படும் தாமதத்தை தவிர்க்கவும், அரசின் திட்டங்கள் விவசாயிகளுக்கு குறித்த நேரத்தில் பயன்பெறும் வகையில், அனைத்து விவரங்களை மின்னணு முறையில் சேகரிக்க தோட்டக்கலைத் துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவற்றின் வாயிலாக விவசாயிகளின் நில உடமைகளை சரி பார்த்து, அவர்களுக்கு ஆதார் எண் போன்ற தனித்துவ அடையாள எண் வழங்கும் சிறப்பு முகாம் அனைத்து வருவாய் கிராமங்களிலும் நடந்து வருகிறது.
தோட்டக்கலைத் துறை, வேளாண்மை துறை, வேளாண் வணிகத்துறை, மகளிர் திட்ட சமுதாய வன பயிற்றுனர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் ஆகியோர் கிராமங்களுக்கு வருகை தந்து, விவசாயிகளுக்கான தனித்துவமான அடையாள எண் வழங்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.
மொபைல்போன் வாயிலாக அடையாள அட்டை
விவசாயிகள் தங்களின் பட்டா, ஆதார் அட்டை மற்றும் மொபைல்போன் வாயிலாக அடையாள அட்டை எண் பெற பதிவு செய்து கொள்ளலாம். இனிவரும் காலங்களில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களின் பயன்களை ஒற்றை சாளர முறையில் விவசாயிகள் பெற இயலும். பிரதமரின் விவசாய நிதி உதவி திட்டத்தின் வாயிலாக பயன் பெற்று வரும் விவசாயிகள் (இன்று) 30-ம் தேதிக்குள் கட்டாயமாக தங்களது நில உடமை விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
51 ஆயிரம் பயனாளிகள் பதிவு
தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சிபிலா மேரி கூறுகையில், ''நீலகிரியில் மொத்தம், 82,495 விவசாயிகள் உள்ளனர். பிரதமரின் கவுரவ நிதி உதவி திட்டத்தின் கீழ , 51,105 பயனாளிகள் பதிவு செய்துள்ளனர். அதில், விவசாயிகள் பதிவேடு திட்டத்தில் இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் உடனடியாக பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில், பிரதமர் நிதி உதவி தொகை கிடைக்காத நிலை ஏற்படும். எனவே, அனைவரும் உடனடியாக பதிவு செய்ய வேண்டும்,'' என்றார்.