தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/கூடலுார் தேவாலாவில் சட்டவிரோதமாக இயங்கும்... தங்க சுரங்கம்!: அத்துமீறலை தடுக்க அதிரடி நடவடிக்கை அவசியம்

கூடலுார் தேவாலாவில் சட்டவிரோதமாக இயங்கும்... தங்க சுரங்கம்!: அத்துமீறலை தடுக்க அதிரடி நடவடிக்கை அவசியம்

கூடலுார் தேவாலாவில் சட்டவிரோதமாக இயங்கும்... தங்க சுரங்கம்!: அத்துமீறலை தடுக்க அதிரடி நடவடிக்கை அவசியம்


ADDED : ஜூலை 31, 2026 06:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 31, 2026 06:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலுார்: கூடலுார் தேவாலா கோல்ட் மைன்ஸ் பகுதியில் சட்டவிரோதமாக தோண்டப்பட்ட தங்க சுரங்க குழிகளை மூடுவதற்கான நடவடிக்கை எடுத்து, அங்கு மக்கள் செல்லாத வகையில் தடை விதிக்க வேண்டும். கூடலுார் அருகே, நாடுகாணி, பொன்வயல், தேவாலா பகுதிகளில் அமைந்துள்ள,'கோல்ட் மைன்ஸ்' பகுதிகளில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சுரங்கம் அமைத்து தங்கம் எடுக்கப்பட்டது. அதில் எந்த பயனும் கிடைக்காததால், சுரங்கப்பாதைகள் மூடப்பட்டன. இந்நிலையில், அந்த பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்ட சுரங்க பாதைகள்; சட்ட விரோத, சுரங்க குழிகளை தோண்டி தங்க படிவங்களை அப்பகுதியை சேர்ந்தவர்கள் எடுத்து வருகின்றனர்.

அதில், சுரங்கங்களில் உள்ள பாறைகளை உடைக்க வெடிப்பொருட்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சில ஆண்டுகளுக்கு முன்பு, தங்க குழிகளில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு மண் சரிந்து சிலர் உயிரிழந்தனர். சுரங்கங்களுக்கு தோண்டப்பட்ட குழிகளில் வனவிலங்குகளும் சிக்கி உயிரிழந்து வருகின்றன.

யானைகளுக்கு பாதிப்பு இந்நிலையில், கடந்த, 2021ல், பொன்வயல் கோல்டுமைன்ஸ் பகுதியில் உள்ள குழியல் சிக்கி உயிருக்கு போராடிய குட்டி யானையை வனத்துறையினர் மீட்டு கூட்டத்தில் சேர்த்தனர். மற்றொரு குழியல் விழுந்த யானை, மண் சரிந்து உயிரிழந்தது.

தொடர்ந்து, 'அப்பகுதி யாரும் செல்ல கூடாது, தங்க குழிகளை தோண்டும் பணியில் ஈடுபட கூடாது, மீறினால், வன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,' என, வனத்துறையினர் எச்சரித்து கண்காணித்து வருகின்றனர். எனினும், இப்பகுதிகளை பலர், சட்ட விரோதமாக அப்பகுதிக்கு சென்று, சுரங்கங்கள்; அங்குள்ள குழிகளில் சிறிய தங்க துகள்களை எடுத்து வருகின்றனர். இதனால், உயிர்பலி ஏற்படும் ஆபத்து உள்ளது.

சுரங்கங்களை மூட முடிவு இந்நிலையில், கடந்த, 22ம் தேவாலா கோல்டு மைண்ட்ஸ் வனப் பகுதியில், பழைய தங்க குழியில், தவறி விழுந்து உயிருக்கு போராடிய குட்டியானையை வனத்துறையினர் மீட்டு கூட்டத்தில் சேர்த்தனர். இதை தொடர்ந்து அப்பகுதியில் கண்காணிப்பு பணியை மேலும் தீவிரப் படுத்தி உள்ளனர்.

வனத்துறையினர் கூறுகையில், 'கோல்ட்மைன்ஸ், உள்ளிட்ட பகுதிகளுக்கு, பொதுமக்கள் செல்ல தடை விதித்து கண்காணித்து வருகிறோம். தடையை மீறுபவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும். சட்டவிரோத தங்க குழிகளை, பழைய சுரங்களை மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக நிதி கேட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இந்த பணியில், தேவாலா போலீசார் உடன் இணைந்து கண்காணிப்பு பணி மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். அப்பகுதிக்கு பொதுமக்கள் அங்கு செல்வதை தடுக்க விரைவில் சோதனை சாவடி அமைக்கப்படும்,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us