/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரியில் பனியின் தாக்கம்: தேயிலை செடி கருகும் நிலை
/
நீலகிரியில் பனியின் தாக்கம்: தேயிலை செடி கருகும் நிலை
நீலகிரியில் பனியின் தாக்கம்: தேயிலை செடி கருகும் நிலை
நீலகிரியில் பனியின் தாக்கம்: தேயிலை செடி கருகும் நிலை
ADDED : டிச 10, 2025 09:30 AM

குன்னுார்: நீலகிரி மாவட்டத்தில் மழைக்கு பிறகு பனி தாக்கம் அதிகரித்து வருவதால், தேயிலை செடிகள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும், நவ. இறுதியில் இருந்து பிப். வரை பனிக்காலம் நீடிக்கும். டிச. மாதம் உறைபனி நிலவும். நடப்பாண்டு நவ. மாதம் கன மழை பெய்த போது, மேகமூட்டம் நிலவியதால், தேயிலை தோட்டங்கள் பசுமைக்கு மாறியுள்ளன.
பசுந்தேயிலைக்கு, 12 மணி நேரம் ஈரப்பதம், 3 மணி நேரம் வெயில், 85 சதவீத காற்று அவசியம். கடந்த, 2 நாட்களாக பனியின் தாக்கம் அதிகரிக்க துவங்கியது.
நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று குறைந்தபட்ச வெப்ப நிலை, 11 டிகிரி செல்சியசாக இருந்த நிலையில், குன்னுார் 'உபாசியில்' 7.7 டிகிரி செல்சியசாக பதிவாகியுள்ளது. பனியால், தேயிலை செடிகளும் கருக துவங்கியுள்ளது. காலை நேரங்களில் தேயிலை தோட்டங்களில் பனி படர்ந்து வெண்மையாக காட்சியளிக்கிறது.
தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்க (உபாசி) வேளாண் ஆராய்ச்சி மைய ஆலோசனை அதிகாரி கூறுகையில், ''குன்னுாரில் நடப்பாண்டு மழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. தாய் இலையை எடுக்காமல் கொழுந்து இலைகளை மட்டும் எடுத்தால் பனியின் தாக்கத்தால் செடிகள் பாதிப்பதை தவிர்க்கலாம், சில நாட்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து உறைபனி நீடிக்கும்,'' என்றார்.

