/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு ஆயுள் சிறை
/
சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு ஆயுள் சிறை
சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு ஆயுள் சிறை
சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு ஆயுள் சிறை
ADDED : டிச 10, 2025 09:31 AM

ஊட்டி: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து, ஊட்டி மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
நீலகிரி மாவட்டம், கூடலுார் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த பேக்கரி தொழிலாளி உஸ்மான், 55, என்பவர் அடிக்கடி அவர் வீட்டுக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், ஒரு முறை வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து தனியாக இருந்த, 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து கூறினால் கொலை செய்து விடுவதாக, சிறுமியை மிரட்டியுள்ளார். அதன்பின், பலமுறை மிரட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதை தொடர்ந்து, சிறுமி தனது பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்ததால், தேவர்சோலை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் போக்சோ சட்டத்தில் 2020ம் ஆண்டு பிப்., 17ம் தேதி உஸ்மானை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் உஸ்மானுக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி எம்.செந்தில் குமார் உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, மாநில அரசு சார்பில், 2 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க, நீலகிரி கலெக்டருக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி வாதாடினார்.

