தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/மேம்படுத்தப்பட்ட சாலை பணி மாவட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு

மேம்படுத்தப்பட்ட சாலை பணி மாவட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு

மேம்படுத்தப்பட்ட சாலை பணி மாவட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு


UPDATED : அக் 14, 2026 12:00 AM

ADDED : அக் 13, 2026 09:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 12:00 AM ADDED : அக் 13, 2026 09:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோத்தகிரி: கோத்தகிரி பகுதியில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை, கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தார்.

குஞ்சப்பனை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பதிவேடுகள், மக்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள், கொட்டக்கம்பை அங்கன்வாடி மையத்தில், குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவு, குழந்தைகளின் எடை, உயரம் குறித்தும், அங்குள்ள ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்தார். கொட்டக்கம்பை அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள புயல் நிவாரண மையம், 13.25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ், கட்டப்பட்டு வரும் சமுதாய கழிப்பிடத்தையும் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், சுண்டட்டி பகுதியில், சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட சாலை, 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்புச் சுவரை நேரில் பார்வையிட்டார்.

தொடர்ந்து, செம்மனாரை பகுதியில், 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பழங்குடியினர்சமுதாயக்கூடம், பிரதான் மந்திரி ஜென்மம் திட்டத்தில், தலா, 5.73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப் பட்டு வரும், 59 தொகுப்பு வீடுகளையும், கெங்கரையில், 4.80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பொது நிதி திட்டத்தில் அமைக்கப்பட் டுள்ள நாற்றங்கால் பண்ணை, குப்பைகளை தரம் பிரிக்கும் கூடத்தையும் ஆய்வு செய்து, பணிகளை தரமாக விரைந்து முடிக்க வேண் டும். என, அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதில், துணை ஆட்சியர் தாட்சாயிணி, உட்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us