UPDATED : அக் 13, 2026 07:08 PM
ADDED : அக் 13, 2026 07:06 PM
அ நிறம் | அளவு
கூடலுார்:
கூடலுார் அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் செப்., மாத சம்பளத்தை நிபந்தனையின்றி வழங்க வலியுறுத்தி, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடலுார் அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரியில், பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்கள், ‘தொழில் வரி செலுத்தி அதன் ரசீதை சமர்ப்பித்தால் மட்டுமே, செப்., மாதம் சம்பளம் வழங்கப்படும்,’ என, கருவூலம் அதிகாரிகள் தெரிவித்தனர். அதிருப்தி அடைந்த கவுரவ விரிவுரையாளர்கள், தொழில் வரி கட்டுவதாகவும், முன்னதாக சம்பளத்தை வழங்கும்படி தெரிவித்தனர். அதிகாரிகள் அதனை ஏற்காததால், 9ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். தீர்வு கிடைக்காத நிலையில், கல்லுாரி வளாகத்தில் இரு நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
