/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடவு துவக்க விழா
/
ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடவு துவக்க விழா
ADDED : ஜூன் 10, 2025 09:23 PM
கோத்தகிரி; ஊட்டி தும்மனட்டி அரசு மேல்நிலை பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி, 'நமது பாரதம் - நமது பசுமை' திட்டத்தின் கீழ், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் துவக்க விழா நடந்தது.
'செவை ரெக்கார்ட் ஹோல்டர் போரம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், ஆசிரியர் பீமன் வரவேற்றார்.
தலைமை ஆசிரியர் சீனிவாசன் தலைமை வகித்தார். முனைவர் வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தும்மனட்டி அரசு மேல்நிலை பள்ளிக்கு 'ஸ்டார் ஐகான்' விருது வழங்கி பாராட்டினார். நல்லாசிரியர் லிங்கன் வாழ்த்தி பேசினார்.
மாநில அரசின் துாய தமிழ் பற்றாளர் விருது பெற்ற கலைவாணி புவி வெப்பமாதல் தடுப்பு வழிகள் முறைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில், பள்ளி வளாகத்தில், 50 மரக்கன்றுகள் நடுவு செய்யப்பட்டன.
நிகழ்ச்சியில், மாணவர்கள் ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.
முதுகலை ஆசிரியர் தேவராஜ் நன்றி கூறினார்.