ADDED : நவ 08, 2024 10:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார்; கூடலுார் கல்வி மாவட்டத்தில் உள்ள, கூடலுார், எருமாடு, ஸ்ரீ மதுரை, பாடந்துறை ஆகிய அரசு பள்ளிகளில், 1.61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டது.
இவற்றை காணொளி வாயிலாக, மாநில முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து, கூடலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் யோகேஸ்வரி வரவேற்றார். அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் நந்தகுமார் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.