/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இடைவிடாது பெய்த மழை; சிரமத்துக்குள்ளான பயணிகள்
/
இடைவிடாது பெய்த மழை; சிரமத்துக்குள்ளான பயணிகள்
ADDED : அக் 22, 2025 11:36 PM

கூடலூர்: கூடலூரில், இடை விடாது பெய்த மழையினால், பஸ் ஸ்டாண்டில், மழையில் நனையாமல் காத்திருக்க வசதியின்றி சிரமப்பட்டனர்.
கூடலூரில், மைசூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய புதிய பஸ் பகுதியில் உள்ள, பழைய பஸ் ஸ்டாண்ட் உடைக்கப்பட்டு, வணிக வளாகத்துடன் கூடிய புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு, கடந்த ஆண்டு பிப்., முதல் செயல்பட்டு வருகிறது. பஸ் ஸ்டாண்டில், போதிய இருக்கைகள் இல்லாததால் முதியவர்கள், கர்ப்பிணி மற்றும் குழந்தைகளுடன் வரும் பெண்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும், வணிக வளாகத்தில் கூடிய பஸ் ஸ்டாண்ட் முன்பகுதி திறந்த வெளி யாக இருப்பதால் மழையின் போது, பயணிகள் நனைந்தபடி காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகை முடிந்து நேற்று, சமவெளி செல்லும் பயணிகள் கூட்டம் பஸ் ஸ்டாண்ட்டில் அதிகமாக இருந்தது. இடைவிடாத பெய்த மழையில், பயணிகள் பஸ் ஸ்டாண்டில், மழையில் நனையாமல் காத்திருக்க போதிய இடவசதி இன்றி, மழையில் நனைந்தபடி சிரமப்பட்டனர். பஸ் ஸ்டாண்டில், மழையில் நனையாமல் காத்திருக்க போதுமான வசதிகள் இல்லாததால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.
பயணிகள் கூறுகையில், 'கூடலூரில், ஏற்கனவே இருந்து பழைய பஸ் ஸ்டாண்ட், பயணிகள் மழையில் நனையாமல் காத்திருக்க வசதியிருந் தது. ஆனால், புதிய பஸ் ஸ்டாண்ட், அதற்கான போதிய வசதி இல்லை. இதனால், மழையின் போது, நனையாமல் காத்திருக்க இடவசதி இன்றி சிரமப்பட்டு வருகிறோம். இப்பிரச்சனைக்கு, தீர்வு காண வேண்டும்' என்றனர்.