/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முழுமை பெறாத தடுப்பு சுவர் வாகனங்கள் நிறுத்துவதில் சிக்கல்
/
முழுமை பெறாத தடுப்பு சுவர் வாகனங்கள் நிறுத்துவதில் சிக்கல்
முழுமை பெறாத தடுப்பு சுவர் வாகனங்கள் நிறுத்துவதில் சிக்கல்
முழுமை பெறாத தடுப்பு சுவர் வாகனங்கள் நிறுத்துவதில் சிக்கல்
ADDED : அக் 22, 2025 10:41 PM
கோத்தகிரி: கோத்தகிரி நகராட்சி அலுவலகம் முன்பு, தடுப்பு சுவர் பணி முழுமை பெறாமல் உள்ளதால், வாகனங்கள் நிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கோத்தகிரி நகராட்சி அலுவலகம் முன்பு, கடந்த ஆண்டு பெய்த மழையில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு, தடுப்பு சுவர் கட்டப்பட்டது. ஆனால், முழுமை பெறாமல் பாதியில் விடப்பட்டுள்ளது.
இதனால், அலுவலகத்திற்கு வந்து செல்லும் நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் தங்களது வாகனங்களை சாலையில் நிறுத்த வேண்டிய நிலை உள்ளது.
இது ஒரு புறம் இருக்க, சாலையில் ஒரு பகுதியில், பள்ளி மாணவர்கள் நடந்து செல்ல ஏதுவாக, 'பேரிகார்டு' அமைத்துள்ளதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ஏற்கனவே , 'பார்க்கிங்' வசதி குறைவாக உள்ள கோத்தகிரி நகரில், அரசுக்கு சொந்தமான இதுபோன்ற இடங்களில் தடுப்பு சுவர் அமைத்து, வாகனங்கள் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்வது அவசியம்.