/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பசுந்தேயிலை விலை நிர்ணயத்தில் முரண்பாடு விவசாயிகளுக்கு இழப்பு!தேயிலை வாரியம் சரிசெய்தால் பெரும் பயன்
/
பசுந்தேயிலை விலை நிர்ணயத்தில் முரண்பாடு விவசாயிகளுக்கு இழப்பு!தேயிலை வாரியம் சரிசெய்தால் பெரும் பயன்
பசுந்தேயிலை விலை நிர்ணயத்தில் முரண்பாடு விவசாயிகளுக்கு இழப்பு!தேயிலை வாரியம் சரிசெய்தால் பெரும் பயன்
பசுந்தேயிலை விலை நிர்ணயத்தில் முரண்பாடு விவசாயிகளுக்கு இழப்பு!தேயிலை வாரியம் சரிசெய்தால் பெரும் பயன்
ADDED : ஆக 13, 2024 01:58 AM
குன்னுார்;'நீலகிரியில் விவசாயிகளுக்கான பசுந்தேயிலை விலை நிர்ணயத்தில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தொழிலை நம்பி பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் உள்ளனர். மேலும், தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கானோர் தேயிலை தொழிலை நம்பி தங்களது வாழ்வாதாரத்தை நகர்த்துகின்றனர். எனினும், உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை ஐகோர்ட் உத்தரவின் பேரில், 2015ல் இருந்து பசுந்தேயிலைக்கு மாதந்தோறும் தேயிலை வாரியம் சார்பில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
தேயிலை வாரியம், தேயிலை சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள, டி.எம் சி.ஓ., (டீ மார்க்கெட்டிங் கன்ட்ரோல் ஆர்டர்) பிரிவில் மாதாந்திர பசுந்தேயிலை விலை கணக்கிடப்படுகிறது.
கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன் இந்த சட்டத்தில், 30ஏ5 (ஏ) 2வது திருத்தத்தின் படி, அந்தந்த மாத ஏலத்தின் அடிப்படையில் அதே மாதத்திற்கு பசுந்தேயிலை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. எனினும், அதில் பல்வேறு குறைபாடுகள் களைய வேண்டிய கட்டாயம் தற்போது உருவாகிஉள்ளது.
முரண்பாடுகளை தவிர்க்க வேண்டும்
நீலகிரி சிறு தேயிலை விவசாயிகள் விழிப்புணர்வு மைய அமைப்பாளர் வேணுகோபால் கூறியதாவது:
'பி.எஸ்.எப்' எனப்படும், தேயிலை துாள் விற்ற விலையில், விலை பகிர்வு பிரிவு மூலம், விற்பனை விலையில், 35 சதவீதம் தொழிற்சாலைக்கும்; 65 சதவீதம் பசுந்தேயிலை அளித்த விவசாயிகளுக்கும் உரியது. ஒரு கிலோ தேயிலை துாள் உற்பத்தி செய்ய, 4 கிலோ பசுந்தேயிலை தேவைப்படுகிறது. தற்போதைய உற்பத்தியளவில், 4:1 என்ற விகிதாசார அடிப்படையில், இந்த, 65 சதவீதத்தில் பெறக்கூடிய பணம், 4 கிலோ பசுந்தேயிலைக்கு உரியது ஆகும்.
ஆனால், ஏலத்தில் வெவ்வேறு வகை தரம் கொண்ட தேயிலை துாள் வழங்கும் தொழிற்சாலைகள், பசுந்தேயிலை கொள்முதல் செய்யும் போது தரத்திற்கு ஏற்ப, வெவ்வேறு தொழிற்சாலைகளின் வெளிப்பாடு மாறுபடுகிறது. உயர் தரமான துாள் தயாரிக்க, 5:1 என்ற விகிதாசார முறையும், குறைந்தபட்ச தரத்தில், 4:1 என்ற விகிதாசார முறையும் உள்ளது. இதன் நிர்ணயவிலை பெறுவதில் முரண்பாடுகள் உள்ளன.
மூன்றாவது வகையில் இயங்கக்கூடிய சிறு தேயிலை தொழிற்சாலைகள் அதிகம் உள்ள நிலையில், இதன் விற்பனை விலை மற்றும் விலை நிர்ணயம் அடிப்படையிலான, மாதாந்திர பசுந்தேயிலையின், சராசரி விலை கணக்கீடு ஒவ்வொரு கிலோ பசுந்தேயிலைக்கும், 2 முதல் 6 ரூபாய் வரை குறைவாக வருவதற்கு காரணமாகிறது.
சிறு தேயிலை தொழிற்சாலைகள் ஒவ்வொரு மாதமும் விற்பனை செய்யும் விலையில் சராசரியை கணக்கிடும் போது, தேயிலை வாரிய மண்டல அலுவலகம், 4:1 விகிதாசாரத்திற்கு குறைவாக கிடைக்கும் தொழிற்சாலைகளின் விலைகளை கணக்கீட்டில் தவிர்க்க வேண்டும்.
இதன் வாயிலாக ஒவ்வொரு மாதமும், 65 ஆயிரம் சிறுதேயிலை விவசாயிகளின் பசுந்தேயிலைக்கு கிடைக்க பெறும் விலை இழப்பை ஈடுகட்டலாம். மாதம், 35 கோடி ரூபாய்க்கும் மேல் மொத்த தொகை விவசாயிகளுக்கு கிடைக்கும்.
இதனால், தேயிலை வாரிய குன்னுார் மண்டல அலுவலகம் கணக்கீட்டு முரண்பாடுகளை சரி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.