/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேயிலை ஏலத்தில் வரத்து அதிகரிப்பு
/
தேயிலை ஏலத்தில் வரத்து அதிகரிப்பு
ADDED : ஜன 14, 2024 11:46 PM

குன்னுார்;குன்னூர் தேயிலை ஏலத்தில், வரத்து அதிகரித்த போதும் விற்பனை கடும் விழ்ச்சியை சந்தித்தது.
குன்னூர் தேயிலை ஏல மையத்தில், இந்த ஆண்டின், 2வது தேயிலை ஏலம் நடந்தது. 12.95 லட்சம் 32 கிலோ இலை ரகம், 3.19 லட்சம் கிலோ டஸ்ட் ரகம் என மொத்தம் 16.14 லட்சம் கிலோ தேயிலை தூள் ஏலத்திற்கு வந்தது.
9.14 லட்சம் கிலோ இலை ரகம், 2.78 லட்சம் கிலோ டஸ்ட் ரகம் என 11.92 லட்சம் கிலோ தேயிலை தூள் என, 73.87 சதவீதம் விற்பனையானது. 11.32 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. சராசரி விலையாக கிலோவிற்கு, 94.97 ரூபாய் என இருந்தது.
இந்த ஏலத்தில் 4.21 லட்சம் கிலோ தேயிலை தூள் தேக்கம் அடைந்தது.
இந்த ஆண்டின் முதல் ஏலத்தில் 14.27 லட்சம் கிலோ வரத்து இருந்த நிலையில், 2வது ஏலத்தில் 1.86 லட்சம் கிலோ வரத்து அதிகரித்தது. எனினும், கடந்த ஏலத்தை விட, 49 ஆயிரம் கிலோ விற்பனை குறைந்தது.
டிச., மாத துவக்கத்தில் 17 கோடி ரூபாய் மொத்த வருமானம் இருந்த நிலையில் தற்போது 6 கோடி ரூபாய் வரை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 2வது ஏலத்தில் சராசரி விலை கிலோவுக்கு 114 ரூபாய் இருந்தது; இந்த ஏலத்தில் 19 ரூபாய் குறைவாக உள்ளது. பொதுவாக ஆண்டுதோறும் டிச.,ஜனவரி மாதங்களில் பனிப்பொழி வின் தாக்கம் அதிகம் இருக்கும் போது வரத்து பெருமளவில் குறையும். ஆனால், இந்த ஆண்டு தொடர் மழை காரணமாக மகசூல் அதிகரித்த போதும், 26 சதவீதம் விற்பனையாகவில்லை. தொடர்ந்து, பணியின் தாக்கம் துவங்க உள்ளதால் வரத்து குறைய வாய்ப்பு உள்ளது.