/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
துவங்கியது காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்: வருவாய் துறை அலுவலகங்கள் 'வெறிச்'

ADDED : பிப் 28, 2024 12:31 AM
ஊட்டி;ஊட்டியில் வருவாய்த்துறை அலுவலர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று முதல் தொடங்கியது.
'பழைய ஓய்வூதிய திட்டம், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்,' உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர், நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதன்படி, நீலகிரி மாவட்டத்திலும் வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டதை துவக்கியுள்ளனர்.
ஊட்டி கலெக்டர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம் உட்பட பல்வேறு வருவாய்துறை அலுவலகங்களில் ஊழியர்கள் வேலைக்கு செல்லாததால் அலுவலகங்கள் வெறிச்சோடின.
வருவாய்த்துறை அலுவலர்கள் கூறியதாவது, 'தமிழகத்தின், 38 மாவட்டங்கள், 315 தாலுகாக்களில் உள்ள தாசில்தார், துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட, 14, ஆயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை, 400 பேர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்,' என்றார்.
வருவாய்த்துறை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் சான்றிதழ் வினியோகம் உட்பட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டது.