/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி திட்ட கருத்தரங்கில் தகவல்
/
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி திட்ட கருத்தரங்கில் தகவல்
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி திட்ட கருத்தரங்கில் தகவல்
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி திட்ட கருத்தரங்கில் தகவல்
ADDED : ஜன 28, 2025 10:13 PM
ஊட்டி; 'திறன் பயிற்சி திட்டத்தில் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டு வருகிறது,' என, தெரிவிக்கப்பட்டது.
ஊட்டியில் திறன் பயிற்சி திட்டம் குறித்த மண்டல அளவிலான கருத்தரங்கு நடந்தது.
மத்திய, மாநில அரசு நிதி உதவியுடன் 'தீன் தயாள் உபாத்யாய' கிராமப்புற திறன் பயிற்சி திட்டம், 2.0 வடிவத்துடன், 2025 - 26 ம் ஆண்டிற்கான செயல் திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஊட்டியில், மண்டல அளவிலான கருத்தரங்கு இரண்டு நாட்கள் நடந்தது. அதில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் திவ்யதர்ஷினி பேசியதாவது, '' இளைஞர்களின் வேலை வாய்ப்பை கருத்தில் கொண்டு, தமிழக அரசு தொழில் நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து திறன் பயிற்சி அளித்து பயிற்சி நிறுவனங்களிலேயே வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தை பெரும் அளவில் முன்னெடுத்து செல்கிறது,'' என்றார்.மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் இணை செயலாளர் பங்கஜ் யாதவ் பேசும்போது, ''தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. வளர்ந்து வரும் தொழில் நிறுவனங்களின் திறன் தேவைகளை கருத்தில் கொண்டும் திறன் பயிற்சி திட்டங்களின் தற்போதைய திட்ட கூறுகளின் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடப்பாண்டு முதல் தீன் தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டம், ஊரக சுய வேலை வாய்ப்பு நிறுவனங்களுக்கு புதுப்பிக்கப்பட்ட, 2.0 வடிவத்தில் செயல்படுத்தப்படுகிறது.'' என்றார்.
தேசிய தகவல் நிலையத்தின் இணை பொது செயலாளர் சஞ்சய்குமார் பாண்டே, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குனர் ஸ்ரேயா சிங், மத்திய அரசின் சார்பு செயலாளர் சுதிப்த் ஆகியோர் பங்கேற்று, 2.0 வடிவமைப்பதற்கான பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.தமிழகம், கேரளா, கர்நாடகா, கோவா, ஆந்திர பிரதேசம், உட்பட பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.