/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க வலியுறுத்தல்
/
தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க வலியுறுத்தல்
தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க வலியுறுத்தல்
தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க வலியுறுத்தல்
ADDED : அக் 11, 2024 10:03 PM
குன்னுார் : மாநில அரசின் டான்டீ மற்றும் இன்கோசர்வ் தொழிலாளர்களுக்கு, 2023-24ம் ஆண்டுக்கு, 20 சதவீத போனஸ் வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட 'பிளான்டேஷன் மஸ்துார் சங்க (பி.எம்.எஸ்.,) பொது செயலாளர் மகேஷ்வரன், தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனு:
தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், 'பிளான்டேஷன்' தொழிலாளர்கள் போனஸ் சம்பந்தமாக அறிவிப்பு வரும் என காத்திருக்கின்றனர்.
கொரோனா காலத்தில் நாடே முடங்கி கிடந்த போது பிளான்டேஷன் தொழிலாளர்கள் வேலைக்கு சென்று முன்கள பணியாற்றினர்.
மழை, வெயில் போன்ற காலங்களில் கடுமையாக உழைத்த பிளான்டேஷன் தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டு, 10 சதவீத போனஸ் அறிவித்தது தொழிலாளர்களின் மத்தியில் மிகுந்த வேதனைக்கும், ஏமாற்றத்திற்கும் உள்ளாக்கியது.
தொழிலாளர்களின் நலன் மற்றும் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, 2023-2024 ஆண்டுக்கான போனஸ், 20 சதவீதம் அரசு வழங்க வேண்டும். இவ்வாறு மகேஷ்வரன் கூறியுள்ளார்.