/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பயன்படாத கழிப்பறை உடனடியாக அகற்ற வலியுறுத்தல்
/
பயன்படாத கழிப்பறை உடனடியாக அகற்ற வலியுறுத்தல்
ADDED : அக் 10, 2024 11:54 PM
ஊட்டி, : 'ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் பழைய கழிப்பறையை இடித்து நடைபாதையை விரிவுப்படுத்த வேண்டும்,' என, வலியுத்தப்பட்டுள்ளது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு, 35 லட்சம் சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.
இப்பகுதியில், ஊட்டி நகராட்சி சார்பில் நடைபாதையை ஒட்டி, இ-டாய்லெட் வசதி ஏற்படுத்தப்பட்டது. நாளடைவில் இந்த கழிப்பறைகளை நகராட்சி நிர்வாகம் பராமரிக்காமல் விட்டதால், பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான நாட்கள் மூடி கிடக்கிறது.
தற்போது, நகராட்சி சார்பில் நகரில், 10 இடங்களில், 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 10 கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது. எனவே, இங்கு நடைபாதையை ஒட்டியுள்ள பழைய கழிப்பறையை இடித்து, சுற்றுலா பயணியர் சிரமமின்றி நடந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

