ADDED : ஆக 28, 2026 02:00 PM
ஊட்டி: ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகையை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
நீலகிரி மாவட்டத்தில், பொது வினியோக திட்டத்தின் கீழ், அத்தியாவசிய பொருட்கள் பெற்று வரும் அனைத்து ரேஷன் கார்டுதாரர்கள், அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கைரேயை ரேஷன் கடையில் உள்ள பி.ஓ.எஸ்., எந்திரத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இதுவரை கைரேகை பதிவு செய்யாதவர்கள், இன்று (29ம் தேதி) ரேஷன் கடைகளில் ‘இகேஓய் சி’ பதிவு மேற்கொள்ள வேண்டும். இதற்காக, ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதால், கைரேகை, கண் கருவிழி சரிபார்ப்பின் வாயிலாக, ‘இகேஒய்சி’ பதிவு மேற்கொள்ள வேண்டும். மேலும், பிற மாநிலம், மாவட்டங்களில் வேலை நிமித்துமாக தங்கி உள்ளவர்கள், அவர்களுக்கு அருகாமையில் உள்ள ரேஷன் கடைகளில், ரேஷன் அட்டை நகலுடன் சென்று கைவிரல் ரேகையை பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
