சுய தொழில் வாழ்வை மேம்படுத்தும் -சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் அறிவுரை
சுய தொழில் வாழ்வை மேம்படுத்தும் -சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் அறிவுரை
ADDED : ஆக 28, 2026 02:10 PM

பந்தலுார்: பந்தலுார் அருகே உப்பட்டி பகுதியில், ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில், இலவச தையல் பயிற்சி நிறைவு செய்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தையல் பயிற்சி ஆசிரியர் சுலோச்சனா வரவேற்றார். டிரஸ்ட் நிர்வாகி விஜயன் சாமுவேல் தலைமை வகித்து பேசுகையில், ‘‘பல குடும்பங்களிலும் போதிய வருவாய் இல்லாமல், பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. இதனை மாற்றும் வகையில் கடந்த பல ஆண்டுகளாக, பெண்களுக்கு தையல் பயிற்சி வழங்கி, அரசு மூலம் தையல் இயந்திரமும் பெற்று கொடுத்து, தொழில் துவங்கவும் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது,’’ என்றார்,
உப்பட்டி எம்.எஸ்.எஸ். பள்ளி முதல்வர் கவிதா, தேவாலா அரசு பழங்குடியினர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திர பாண்டியன், கூடலுார் அரசு கல்லுார் உதவி பேராசிரியர் மகேஸ்வரன் ஆகியோர் பேசினர். தொடர்ந்து, தையல் பயிற்சி நிறைவு செய்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
