/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அபாய மரங்கள் அகற்றும் பணி தீவிரம்
/
அபாய மரங்கள் அகற்றும் பணி தீவிரம்
ADDED : செப் 26, 2024 11:19 PM

கோத்தகிரி : கோத்தகிரி - கட்டபெட்டு இடையே, வெஸ்ட் புரூக் பகுதியில் அபாய மரங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது.
கோத்தகிரி, ஊட்டி மற்றும் குன்னுார் சாலையோரங்களில், வானுயர்ந்த கற்பூர மரங்கள் அபாய நிலையில் உள்ளன. மழையுடன் காற்று வீசும் போது, இந்த மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பது வாடிக்கையாக உள்ளது.
'வானுயர்ந்த அபாய மரங்களை அகற்ற வேண்டும்,' என, பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து, மாவட்ட நிர்வாகம், அனைத்து பகுதிகளிலும் அபாய மரங்களை அகற்றி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, கட்டபெட்டு - ஊட்டி இடையே, கார்ஸ்வுட் பகுதியில் மரங்கள் அகற்றப்பட்டன. தற்போது, வெஸ்ட் புரூக் பகுதியில் மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது.
டிரைவர்கள் கூறுகையில், 'இச்சாலையில், அபாய மரங்கள் முழுமையாக அகற்றப்படும் பட்சத்தில், மழை நாட்களில் மரங்கள் விழுந்து பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும்,' என்றனர்.