/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அஞ்சலகத்தில் நேரடி முகவராக பணிபுரிய விருப்பமா? 18ல் நடக்கும் நேர் காணலில் பங்கேற்கலாம்

ADDED : அக் 09, 2024 10:01 PM
ஊட்டி : அஞ்சலக ஆயுள் காப்பீடு நேரடி முகவராக பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் இம்மாதம், 18ம் தேதி நடக்கும் நேர் காணலில் பங்கேற்கலாம்.
நீலகிரி கோட்டம் அஞ்சலகம் அறிக்கை:
நீலகிரி கோட்டம் அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டத்தை விரிவுபடுத்துவதற்காக முகவர்களை பணியமர்த்த உள்ளது. அஞ்சலக ஆயுள் காப்பீடு நேரடி முகவராக பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் இம்மாதம், 18 ம் தேதி காலை, 10:30 மணிக்கு அஞ்சலக கண்காணிப்பாளர் நீலகிரி கோட்டம், ஊட்டி அலுவலகத்தில் நடக்கும் நேர்காணலில் பங்கேற்கலாம்.
தங்களின் வயது சான்றிதழ், கல்வி சான்றிதழ், ஆதார் நகல் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இரண்டு பாஸ்போர்ட் அளவு போட்டோ மற்றும் தங்களை பற்றிய முழு விவரங்களுடன் பங்கேற்ற வேண்டும்.
கல்வி தகுதி: 10ம் வகுப்பில் தேர்ச்சி, வயது வரம்பு, 18 வயது முதல், 50 வயது. தேர்வு பெற்ற நேரடி முகவர்கள், கள அலுவலர்கள், குன்னுார் மற்றும் கூடலுார் சுற்றுவட்டார பகுதிகளில் பணி புரிய வேண்டும். 5000 வைப்பு தொகை செலுத்த வேண்டும். மேலும், விபரங்களுக்கு, ரவிச்சந்திரன் - 9442773975 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.