/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா போட்டிகள் பங்கேற்க அழைப்பு
/
திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா போட்டிகள் பங்கேற்க அழைப்பு
திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா போட்டிகள் பங்கேற்க அழைப்பு
திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா போட்டிகள் பங்கேற்க அழைப்பு
ADDED : டிச 09, 2024 04:39 AM
ஊட்டி : திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை ஒட்டி நடத்தப்படும் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை:
திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை ஒட்டி பல்வேறு போட்டிகளை தமிழ் வளர்ச்சி துறை நடத்தி பரிசுகள் வழங்க உள்ளது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்க உள்ளது.
அதன்படி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, 6 வயது வரையிலானவர்களுக்கு ஒரு அதிகாரம், 7 முதல், 10 வயது வரையிலானவர்களுக்கு மூன்று அதிகாரங்கள்; கட்டுரை போட்டியில், கற்றலின் மேன்மை குறித்து திருக்குறள்; அன்றாட வாழ்க்கையில் திருக்குறளின் பங்கு இரு தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் மூன்று பக்க அளவில் கட்டுரைகள் அமைத்தல் வேண்டும். கட்டுரைகளை தட்டச்சு செய்து பி.டி.எப்., கோப்பாக அனுப்ப வேண்டும்.
ஓவிய போட்டியில் திருக்குறளில் பிரிவு-1, ஏதேனும் ஒரு குரளை கருப்பொருளாக கொண்டு ஓவியங்கள் அமைய வேண்டும். அல்லது திருக்குறளில் நன்மைகள் குறித்து ஓவியங்கள் அமையலாம்.
அனைத்து பிரிவினர் பங்கேற்கலாம். பிரிவு-2ல், 1ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் திருவள்ளுவர் படத்தை ஓவியமாக தீட்ட வேண்டும். இரு பிரிவினர் வரைந்த ஓவியங்களை புகைப்படங்களாக எடுத்து அனுப்ப வேண்டும். குறும்பட போட்டியில் திருக்குறளை மையமாக கொண்டு, 3 நிமிடங்களுக்குள் அமைய வேண்டும். கவிதை போட்டியில் திருக்குறளின் சிறப்பு குறித்து கவிதைகள் படைக்க வேண்டும் கவிதைகள், 16 வரிக்குள் அமைய வேண்டும். 'செல்பி' போட்டிகள் அனைத்து வயதினர் பங்கேற்று தங்கள் பகுதியில் பொது இடங்களில் உள்ள திருவள்ளுவர் சிலை அல்லது திருக்குறள் எழுதப்பட்ட இடங்களில் முன்பு நின்று செல்பி எடுத்து அனுப்ப வேண்டும்.
போட்டியாளர்கள் தங்களது படைப்புகளை இம்மாதம், 18ம் தேதிக்குள் வீடியோ, போட்டோ மற்றும் பி.டி.எப்., வடிவில், tndiprmhkural@gmail.com என்ற இ---மெயிலில் அனுப்ப வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.