/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீர் மேலாண்மை ஆய்வு கட்டுரை சமர்பிக்க மாணவர்களுக்கு அழைப்பு
/
நீர் மேலாண்மை ஆய்வு கட்டுரை சமர்பிக்க மாணவர்களுக்கு அழைப்பு
நீர் மேலாண்மை ஆய்வு கட்டுரை சமர்பிக்க மாணவர்களுக்கு அழைப்பு
நீர் மேலாண்மை ஆய்வு கட்டுரை சமர்பிக்க மாணவர்களுக்கு அழைப்பு
ADDED : நவ 12, 2024 06:07 AM
கோத்தகிரி; தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கடந்த, 34 ஆண்டுகளாக அறிவியல் ஆய்வு கட்டுரை தயாரிக்கும் போட்டிக்கான, குழந்தைகள் அறிவியல் மாநாடு குறித்து, வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
ஊட்டி அரசு மேல்நிலை பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ராஜூ பேசியதாவது:
இந்த ஆண்டிற்கான குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் தலைப்பு, 'நீடித்த நீர் மேலாண்மை மற்றும் சுகாதாரம்,' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தலைப்பின் கீழ், ஐந்து துணை தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும், பத்து முதல், 13 வயது வரை உள்ள மாணவர்கள் இடைநிலை பிரிவிலும், 14 முதல், 17 வயது வரை உள்ள மாணவர்கள் மேல் நிலை பிரிவிலும் ஆய்வு கட்டுரைகள் தயாரிக்கலாம். இரண்டு மாணவர்கள், ஒரு வழிகாட்டி ஆசிரியரின் உதவியுடன், ஆய்வு கட்டுரைகளை தயாரித்து, மாவட்ட அளவில் நடைபெறும் மாநாட்டில் சமர்ப்பிக்க வேண்டும்.
மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படும் கட்டுரைகள், மாநில அளவில் நடைபெறும் மாநாட்டில் பங்கு பெறும். இந்த ஆய்வு கட்டுரையின் மூலம், மாணவர்களும் மேம்பட முடியும். இவ்வாறு, அவர் பேசினார்.
ஊட்டி லயன்ஸ் கிளப் தலைவர் சாலமன், கவர்னர் சுரேஷ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

