/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரூ.18 லட்சம் மதிப்புள்ள இரும்பு தடுப்பு வேலி திருட்டு: மூன்று பேர் கைது; இருவர் தலைமறைவு

ADDED : ஆக 21, 2025 07:58 PM
குன்னுார்: குன்னுார் நெடுஞ்சாலை துறையின், 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தடுப்பு வேலி இரும்புகள் திருடி சென்ற, 3 பேர் கைது செய்யப்பட்டு லாரி மற்றும் பிக்--அப் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
குன்னுார் சேலாஸ் சோல்ராக் சாலையில், நெடுஞ்சாலை துறையினரால் அமைக்கப்பட்ட, 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, தடுப்பு வேலி இரும்புகள், 240 மீட்டர் காணாமல் போனது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, கொலக்கம்பை போலீசில் நெடுஞ்சாலை துறையினர் புகார் தெரிவித்தனர்.
புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உதவியுடன், சி.சி.டி.வி, காட்சிகளை ஆய்வு செய்ததில் இவற்றை கூடலுார் கொண்டு சென்றது தெரிய வந்தது.
இது தொடர்பாக, கூடலுார் அருகே அய்யன் கொல்லி பகுதியை சேர்ந்த, சந்தானம்,48, புண்ணிய மூர்த்தி, 44, சிவக்குமார்,39, ஆகியோரை கைது செய்து, லாரி மற்றும் 'பிக்--அப்' வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
போலீசார் கூறுகையில்,'விசாரணை நடத்துவதை அறிந்து அனைவரும் தலைமறைவாகினர். இதில், சந்தானம் கையுன்னி பகுதியில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து மற்ற இருவரும் பிடிபட்டனர். கர்நாடகா மாநிலத்திற்கு பழைய இரும்பு பொருட்களை கொண்டு சென்று விற்பனை செய்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, இவர்கள் பல இடங்களிலும் இரும்பு தடுப்புகளை திருடியது சென்று, விற்பனை செய்தது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, தலைமறைவாக உள்ள மேலும் இருவரையும் தேடி வருகிறோம்,' என்றனர்.