sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நீலகிரி மாவட்டம் முழுவதும் டிச., முதல்- மார்ச் வரை... நீர்போக சாகுபடி! மகசூலை அதிகரிக்க தோட்டக்கலை துறை நடவடிக்கை

/

நீலகிரி மாவட்டம் முழுவதும் டிச., முதல்- மார்ச் வரை... நீர்போக சாகுபடி! மகசூலை அதிகரிக்க தோட்டக்கலை துறை நடவடிக்கை

நீலகிரி மாவட்டம் முழுவதும் டிச., முதல்- மார்ச் வரை... நீர்போக சாகுபடி! மகசூலை அதிகரிக்க தோட்டக்கலை துறை நடவடிக்கை

நீலகிரி மாவட்டம் முழுவதும் டிச., முதல்- மார்ச் வரை... நீர்போக சாகுபடி! மகசூலை அதிகரிக்க தோட்டக்கலை துறை நடவடிக்கை


ADDED : டிச 06, 2024 06:38 AM

Google News

ADDED : டிச 06, 2024 06:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி: 'மலை மாவட்டத்தில், விவசாயிகள் நீர்போக விவசாயத்தை அதிகரிக்க வேண்டும்,' என, தோட்டக்கலை துறை அறிவுறுத்தி உள்ளது.

நீலகிரியின் தட்பவெப்ப நிலை பல்வேறு பயிர்கள் சாகுபடிக்கு உகந்ததாக உள்ளது. இங்கு தேயிலை, காய்கறிகள், பழங்கள், நறுமண பயிர்கள், மலர்கள், மருத்துவ பயிர்கள் மற்றும் மலை தோட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

அதில், குன்னுார்,கோத்தகிரி, குந்தா பகுதிகளில் தேயிலை, உருளை கிழங்கு, முட்டைகோஸ், கேரட், பீட்ரூட், பீன்ஸ், பூண்டு, உள்ளிட்ட மலை காய்கறிகள் மற்றும் இங்கிலீஸ் காய்கறிகளான நுால்கோல், டர்னிப் உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது.

கூடலுார், பந்தலுார் பகுதிகளில் கிராம்பு, ஜாதிக்காய், மிளகு, இஞ்சி மற்றும் பழங்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. தோட்டக்கலை பயிரான மலைகாய்கறி, நீலகிரியில் ஆண்டிற்கு, 'நீர் போகும்; கார் போகம் மற்றும் கடை போகும்' என, மூன்று பருவங்களாக சாகுபடி செய்யப்படுகிறது.

60 ஆயிரம் ஏக்கரில் தேயிலை


நீலகிரியை பொறுத்தவரை, 60 ஆயிரம் ஏக்கரில் தேயிலை விவசாயம்; 20 ஆயிரம் ஏக்கரில் மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.

தவிர, தேயிலை தோட்ட நடுவில் ஊடு பயிராக பல ஏக்கரில் மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.

நடப்பாண்டில் கோடை மழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை என்றாலும்,தென்மேற்கு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்து தண்ணீர் தேவையை பூர்த்தி செய்தது. வடகிழக்கு பருவ மழை தாமதமாக துவங்கினாலும், அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அணைகள், நீராதார பகுதிகளில் தேவைக்கேற்ப தண்ணீர் உள்ளது.

விவசாய சாகுபடி தடையின்றி மேற்கொள்ள முடிகிறது.

அதே வேளையில் திடீர் காலநிலை மாற்றத்தால் சில பகுதிகளில் அதிக மழை பொழிவு ஏற்பட்டு மலை காய்கறிகள் பாதிக்கப்படுகிறது. ஒரு சில நேரங்களில் கடும் மேகமூட்டம் தென்படுவதால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

இதுபோன்ற காலநிலை மாற்றத்தால் விவசாயிகள் நஷ்டம் அடையும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

கிராமங்களில் விழிப்புணர்வு


காலநிலை மாற்றத்தின் போது பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் மேற்கொள்ளும் வழிமுறைகள் குறித்து தோட்டக்கலை துறையினர் அவ்வப்போது கிராமங்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.

இயற்கை விவசாயம், இடுப்பொருட்களுக்கான மானிய திட்டங்களையும் தெரிவித்து வருகின்றனர். தற்போது, நீர்போக சாகுபடி மேற்கொள்ளப்படுவதால், ஊட்டி உட்பட புறநகர் பகுதிகளில் விவசாயிகள் தங்களது மலை காய்கறி தோட்டங்களை தயார்படுத்தி வருவதுடன், விதைப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

விவசாயிகள் பாதிக்க கூடாது...!

தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிபிலா மேரி கூறுகையில்,''விவசாயிகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக விவசாயிகளுக்காக மாதம்தோறும் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. விவசாயிகள் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் ஏதேனும் இருப்பின் அந்த கோரிக்கைகளை முன் கூட்டியே தெரிவிக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இம்மாதத்திற்கான குறைதீர்க்கும் கூட்டம் வரும், 20ம் தேதி கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. எனவே, விவசாயிகள் கோரிக்கைகள் ஏதேனும் இருப்பின், தோட்டக்கலை இணை இயக்குனர் அலுவலகத்தில் தெரிவிக்கலாம்,'' என்றார்.








      Dinamalar
      Follow us