/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாணவர்கள் கற்கும் திறனில் 75 சதவீதம் கற்றல் நிகழ்வு; கல்லுாரி பருவத்தில் நடப்பதாக கருத்து
/
மாணவர்கள் கற்கும் திறனில் 75 சதவீதம் கற்றல் நிகழ்வு; கல்லுாரி பருவத்தில் நடப்பதாக கருத்து
மாணவர்கள் கற்கும் திறனில் 75 சதவீதம் கற்றல் நிகழ்வு; கல்லுாரி பருவத்தில் நடப்பதாக கருத்து
மாணவர்கள் கற்கும் திறனில் 75 சதவீதம் கற்றல் நிகழ்வு; கல்லுாரி பருவத்தில் நடப்பதாக கருத்து
ADDED : ஜூலை 08, 2025 08:30 PM
கோத்தகிரி; ஊட்டி அரசு கலை கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு மற்றும் அறிமுக கருத்தரங்கு நடந்தது.
கல்லுாரி முதலவர் ராமலட்சுமி தலைமை வகித்தார். குன்னுார் இந்தியன் வங்கி மேலாளர் சங்கர், கல்லுாரி என்.சி.சி., பொறுப்பாளர் கேப்டன் விஜய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ஆசிரியர் ராஜூ, சிறப்பு கருத்தாளராக பங்கேற்று பேசியதாவது:
ஒரு மாணவருடைய கற்கும் திறனில், 75 சதவீதம் கற்றல் நிகழ்வு கல்லுாரி பருவத்தில்தான் நடக்கிறது. மனித மூளை என்பது, ஒரு அற்புதமான சூப்பர் கம்ப்யூட்டர். ஒரு கோடி செல்கள், பத்தாயிரம் கோடி நியூரான்கள் அமைப்பை கொண்ட மனித மூளையின் மாதிரிதான் இன்றைய 'ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்' எனப்படும் செயற்கை நுண்ணறிவு துறையாகும்.
நாம் நமது மூளையின் திறனில், இரண்டு முதல், மூன்று சதவீதம் மட்டுமே பயன்படுத்துகிறோம் என ஒரு ஆய்வு கூறுகிறது. ஆனால், நவீன அறிவியல் மூளையின், 100 சதவீதம் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை கண்டறிந்துள்ளது.
இன்றைய நவீன தொழில்நுட்பங்கள் பெருமளவிலான வேலைவாய்ப்பை கொடுக்காது. அனைத்து துறைகளிலும் புதுமை படைத்தல் மட்டுமே, வருங்கால வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடும்.
இன்றைய காலகட்டத்தில், காலநிலை மாற்றத்தின் விளைவுகள் குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு பெற வேண்டும். காலநிலை மாற்றத்தின் காரணமாக, நாம் உண்ணும் அரிசியில் 'ஆர்சனிக்' என்ற விஷத்தின் அளவு இரு மடங்காக அதிகரிப்பதாக ஆய்வு கூறுகிறது.
இதனால், புற்றுநோய், சர்க்கரை நோய் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மாணவர்கள் தங்கள் மூளையின் முழு திறனையும் முழுமையாக பயன்படுத்தும் வகையில், மது போன்ற போதை பொருட்களை முழுவதுமாக தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். பேராசிரியர் ஜெயபாலன் வரவேற்றார். பேராசிரியர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.