/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முக்கி மலையில் மரங்கள் வெட்டிய விவகாரம்; அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது தெளிவு
/
முக்கி மலையில் மரங்கள் வெட்டிய விவகாரம்; அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது தெளிவு
முக்கி மலையில் மரங்கள் வெட்டிய விவகாரம்; அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது தெளிவு
முக்கி மலையில் மரங்கள் வெட்டிய விவகாரம்; அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது தெளிவு
ADDED : ஏப் 21, 2025 04:44 AM
மஞ்சூர் : முக்கிமலை, வருவாய் துறை இடத்தில், அனுமதியின்றி வெட்டப்பட்ட மரங்கள் தொடர்பாக, தகவல் அறியும் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்வியால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியிருப்பது தெரிய வந்துள்ளது.
மஞ்சூர் அருகே பிக்கட்டி பேரூராட்சியில், முக்கிமலை சுடுகாடு பகுதியில், நிலச்சரிவு அபாய இடத்தில், வருவாய் துறைக்கு சொந்தமான, 2.5 ஏக்கரில், 40 ஆண்டுகளுக்கு முன்பு, கற்பூர மரங்கள் நடவு செய்யப்பட்டன. கடந்த ஜன., மாதம் இப்பகுதியில் உள்ள கற்பூர மரங்களின் கிளைகள் மட்டுமல்லாமல், மரங்கள் முழுவதும் வெட்டப்பட்டு கடத்தப்பட்டது.
இது தொடர்பாக, மக்கள் சார்பில், மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், ஆர்.டி.ஓ., தாசில்தாருக்கு மனுக்கள் அனுப்பப்பட்டன. மஞ்சூர் போலீஸ் ஸ்டேஷனிலும் புகார் கொடுக்கப்பட்டது. எனினும், தீர்வு கிடைக்காததால், முக்கிமலையை சேர்ந்த சுகுமாரன், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகள் தொடர்பாக அளித்த விபரங்களில் முறைகேடு நடந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சுகுமாரன் கூறுகையில், ''விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக, சாலையோர மரங்களுடன், சோலையினுள் நுாற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டன.
அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதை தொடர்ந்து, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளில் முறைகேடுகள் நடந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குறிப்பிட்ட பகுதியில், 37 மரங்கள் வெட்டப்பட்டதாகவும், 35 ஆயிரம் ரூபாய்க்கு டெண்டர் விடாமலேயே வழங்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி, இதற்கு காரணமான அனைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.