/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குப்பையை குறைப்பது அவசியம்; மாணவர்களுக்கு விழிப்புணர்வு
/
குப்பையை குறைப்பது அவசியம்; மாணவர்களுக்கு விழிப்புணர்வு
குப்பையை குறைப்பது அவசியம்; மாணவர்களுக்கு விழிப்புணர்வு
குப்பையை குறைப்பது அவசியம்; மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : பிப் 13, 2025 09:17 PM
குன்னுார் ;மாணவ பருவத்தில் நுகர்வு பயன்பாடுகளில் குப்பைகள் அதிகரிப்பதை தவிர்க்க பழங்குடியின மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
குன்னுாரில் உள்ள, 30 வார்டுகளில் சேகரமாகும் குப்பைகள், ஓட்டுப்பட்டறை அருகே கழிவு மேலாண்மை பூங்காவில், நகராட்சி ஒத்துழைப்புடன் 'கிளீன் குன்னுார்' அமைப்பு சார்பில், தரம் பிரிக்கப்படுகிறது.
இங்கு, பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் கீழ், ஊட்டியில் செயல்படும் பழங்குடியினர் பள்ளி மாணவ, மாணவியரை ஆசிரியர்கள் அழைத்து வந்தனர்.
அதில், 'மட்கும் குப்பை; மட்கா குப்பைகள் பிரிப்பது; பேலிங் இயந்திரம் மூலம் 'பிளாஸ்டிக்' உள்ளிட்டவை அழுத்தம் கொடுப்பது; துணி வகைகள் உட்பட பயனற்ற பிரம்மாண்ட அடுப்பில் எரிப்பது; இறைச்சி கழிவில் நுண்ணுயிர் உரம் தயாரிப்பது,' போன்றவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆசிரியர்கள் கூறுகையில், 'மாணவ பருவத்திலேயே, நுகர்வு பயன்பாடுகளில், குப்பைகள் அதிகப்படுத்துவதை தவிர்ப்பது; குப்பைகள் குறைப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை ஆங்காங்கே வீசுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்; மறு உபயோகம் செய்து குப்பைகள் அதிகரிப்பதை தவிர்க்க வேண்டும்,' என்றனர். கிளீன் குன்னுார் அமைப்பு தலைவர் சமந்தா அயனா, செயலாளர் வசந்தன் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.