/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீர் நிலைகளில் பட்டாசு ரசாயனம் கலக்காமல் பார்த்து கொள்வது அவசியம்; பள்ளி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல்

ADDED : அக் 15, 2025 11:03 PM

ஊட்டி: 'நீர் நிலைகள், வனப்பகுதிகளில் பட்டாசுகளின் ரசாயன பொருட்கள் கலக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்,'என, அறிவுறுத்தப்பட்டது.
ஊட்டி பிரீக்ஸ் நினைவு மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையின் கீழ் உள்ள, நீலகிரி மாவட்ட தேசிய பசுமை படை சார்பில், சுற்றுச்சூழலுக்கு பாதகம் இல்லாத தீபாவளி கொண்டாட வலியுறுத்தி, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் பேசுகையில், ''நீலகிரி மாவட்டம் வனப்பகுதிகளை கொண்ட பல்லுயிர் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். வனவிலங்குகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். வனப்பகுதி அருகே உள்ள சுற்றுலா தங்கும் விடுதிகள் தீபாவளி கொண்டாட்டத்தை வாண வேடிக்கை, அதிக மாசு ஏற்படுத்தும் பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும்.
மேலும், பட்டாசுகளில் உள்ள, நைட்ரேட், பொட்டாசியம் குளோரைடு, அலுமினியம் போன்ற வற்றால் ஏற்படும் புகை, ஆஸ்துமா மற்றும் பிற நோயாளிகளை மிகவும் பாதிக்கும். குறிப்பாக, நீர் நிலைகள் மற்றும் வனப்பகுதிகளில் பட்டாசுகளின் ரசாயன பொருட்கள் கலக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்,'' என்றார்.
பள்ளி தலைமையாசிரியர் சரவணன் , மாவட்ட நிர்வாகத்தின் பசுமை காப்பாளர்கள் கீர்த்தனா, பூஜா, தேசிய பசுமை படை பொறுப்பாசிரியர் சிந்தாமணி உட்பட பலர் பங்கேற்றனர்.