ADDED : அக் 15, 2025 11:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: கூடலுார் அரசு கல்லுாரி மாணவர்களுக்கு, 'சைபர் கிரைம், சைபர் பாதுகாப்பு' குறித்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் விழிப்புணர்வு நடந்தது.
கூடலுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், சைபர் கிரைம், சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமுக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி பாலமுருகன் தலைமை வகித்தார்.
அதில், 'சைபர் கிரைம், சைபர் பாதுகாப்பு, மொபைல் போனில் தேவையில்லாத புது செயலிகளை பதிவிறக்கம் செய்வது,' போன்றவற்றால், ஏற்படும் விளைவுகள் குறித்து பேசினார். இது தொடர்பான சட்டங்கள் குறித்து விளக்கினார். முகாமில், கல்லுாரி, பேராசிரியர்கள், மாணவர்கள் பங் கேற்றனர்.