UPDATED : அக் 26, 2026 06:51 PM
ADDED : அக் 26, 2026 06:46 PM
ஊட்டி:
கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
நீலகிரியில், குதிரை சவாரி, ரைடிங் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்காக வளர்க்கப்படும் அனைத்து குதிரைகள் மற்றும் பிற பணிகான குதிரை இனங்களை, அதன் உரிமையாளர்கள் தமிழ்நாடு விலங்குகள் நல வாரிய இணையதளத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.
பதிவு பெறுவதற்கு, ‘உரிமையாளர்கள் மீது விலங்குகளை கொடுமைப்படுத்துதல் அல்லது அலட்சியமாக பராமரித்த தொடர்பான வழக்குகள் இல்லாமல் இருப்பது; குதிரைகள் மற்றும் தங்குமிடங்களை ஆய்வு செய்ய அனுமதிப்பது; உரிமை மற்றும் அடையாள ஆவணங்களை சமர்ப்பிப்பது,’ உள்ளிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்வது அவசியம்.
மேலும், குதிரைகள் தங்கும் இடங்களில் காற்றோட்டம், கழிவு மேலாண்மை, வெயில் மற்றும் மழையில் இருந்து பாதுகாப்பு மற்றும் போதிய குடிநீர் வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். நலவாரிய இணையதளத்தில், நவ., 30ம் தேதிக்குள் பதிவு செய்து, வாரிய விதிமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.
பதிவு மற்றும் வழிகாட்டுதல்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருத்துவமனை, தமிழ்நாடு விலங்கு நல வாரிய அலுவலர் https:/tnawb.tn.gov.in என்ற அதிகார பூர்வ இணைய தளத்தை அணுகலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
