/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது அவசியம்
/
நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது அவசியம்
ADDED : ஜன 13, 2026 05:18 AM
குன்னுார்: குன்னுாரில் கடந்த ஒன்றாம் தேதி இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்தது. அதில், மாடல் ஹவுஸ் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் புதைந்தன. வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்து சேதத்தை ஏற்படுத்தியது. நகராட்சி ஊழியர்கள் பொக்லைன் உதவியுடன் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த பகுதிகளில் அதிகளவில் நீரோடை மற்றும் சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதுடன், மழைநீர் செல்லும் பழமையான கால்வாய்கள் மூடப்பட்டு, மாற்று பாதை வழியாக மழை வெள்ளம் செல்வதால் இது போன்ற பாதிப்புகள் தொடர்வதாக, மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மீண்டும் மழை காலங்களில் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மக்கள் கூறுகையில், 'மீண்டும் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, நகராட்சி மற்றும் வருவாய் துறையினர் இணைந்து நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி நீரோடையை பாதுகாக்கவும், மூடப்பட்டுள்ள பழைய மழைநீர் கால்வாய்களை சீரமைக்கவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்,' என்றனர்.

