தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ லாரி விபத்தால் மூன்று மாநில போக்குவரத்து பாதிப்பு!

 லாரி விபத்தால் மூன்று மாநில போக்குவரத்து பாதிப்பு!

 லாரி விபத்தால் மூன்று மாநில போக்குவரத்து பாதிப்பு!


ADDED : ஜன 12, 2026 07:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 12, 2026 07:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலூர்: தமிழக -- கேரளா எல்லையான, கீழ்நாடுகாணியில் லாரி கவிழ்ந்த விபத்தில் மூன்று மாநில போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மகாராஷ்டிரா மாநிலம், பூனேயிலிருந்து, கேரளாவுக்கு கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்படும் இலகுரக கற்கள் ஏற்றி வந்த லாரி, நேற்று மதியம், 12:45 மணிக்கு நீலகிரி மாவட்டம், கூடலூர் நாடுகாணியை கடந்து, கேரளா நோக்கி சென்றது.

கீழ்நாடுகாணி அருகே, லாரி கட்டுப்பாட்டை இழந்து, சாலை நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியில் இருந்த கற்கள் சாலையில் சிதறியது. காயமடைந்த லாரி டிரைவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.

விபத்து காரணமாக, தமிழக, கேரளா, கர்நாடகாவுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள், சரகு வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டது.

தேவாலா எஸ்.எஸ்.ஐ.,கள் ஸ்ரீஜன், தாமோதரன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போக்குவரத்து சீரமைக்க பொக்லைன் கொண்டுவரப்பட்டு சீரமைப்பு பணி நடந்தது. அப்பகுதியில் காத்திருந்த சுற்றுலா பயணியர், வாகன ஓட்டுனர்கள் இணைந்து, சாலையில் சிதறி கிடந்த கற்களை அகற்ற உதவி செய்தனர். பணியில் ஈடுபட்டனர்.

கேரளா வழிகடவு பகுதியில் இருந்து வரவழைக்கப்பட்ட கிரைன் வாயிலாக, மாலை, 5:30 மணிக்கு லாரி மீட்கப்பட்டு போக்குவரத்து சீரானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us