சேறும் சகதியாக மாறிய ஜெகதளா சாலை! மக்கள் நடமாட சிரமம்
சேறும் சகதியாக மாறிய ஜெகதளா சாலை! மக்கள் நடமாட சிரமம்
UPDATED : நவ 15, 2026 06:20 PM
ADDED : நவ 15, 2026 06:16 PM

குன்னூர்: அருவங்காடு ஜெகதளா சாலையில் மண் சேறு கலந்த நீர் ஓடுவதால், மக்கள் நடமாட சிரமப்படுகின்றனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே அருவங்காடு ஆர்ச் முதல் ஜெகதளா சாலையில் 100 மீ., வரை
அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஏற்கனவே இந்த சாலை சீரமைக்காத நிலையில் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது.
இங்கு குழாய் பதிக்க குழி தோண்டப்பட்டதற்கு ஜெகதளா பேரூராட்சி சார்பில் நிதியை தொழிற்சாலையிடம் வழங்கப்பட்டுள்ளது.
இங்கு தொழிற்சாலையின் குடிநீர் தொட்டியில் இருந்து சேறு கலந்த நீர் அவ்வப்போது சாலையில் திருப்பி விடப்படுகிறது.
தொழிற்சங்கத்தின் அலுவலகம் அருகே உள்ள பகுதியில் கால்வாய் அடைப்பு முழுமையாக சரி செய்யாததால், சேறு கலந்த நீர் சாலையில் ஓடுகிறது.
சேறு முழுவதும் சாலையில் தேங்கி பொதுமக்கள் நடமாட சிரமப்படுகின்றனர். இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் கீழே விழுந்த விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இது குறித்து பலமுறை புகார்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
விபத்துக்கள் ஏற்படும் முன் தீர்வு காண்பதுடன் சாலையையும் சீரமைக்க தொழிற்சங்கத்தினர், தொழிற்சாலை நிர்வாகத்திற்கு வலியுறுத்தி உடனடியாக பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
