UPDATED : நவ 15, 2026 06:20 PM
ADDED : நவ 15, 2026 06:20 PM
அ நிறம் | அளவு
குன்னூர்: குன்னூரில் 17 வயது மாணவிக்கு குழந்தை பிறந்தது தொடர்பாக போக்சோவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியை சேர்ந்த, 17 வயது கல்லூரி மாணவிக்கு, பள்ளியில் படிக்கும்போது சமூக வலை தளத்தில் மதுரையை சேர்ந்த செல்வகுமார் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. ராணுவத்தில் பணியாற்றுவதாகவும், திருமணம் செய்வதாகவும் ஆசை வார்த்தை கூறி, சிறுமியை பலாத்காரம் செய்ததாகவும், விடுதியில் இருந்து வீடு திரும்பிய மாணவிக்கு, குன்னூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது தொடர்பாகவும், குன்னூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான செந்தில்குமாரை தேடி வருகின்றனர்.
