/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கலெக்டர் அலுவலகம் முன் ஜாக்டோ-ஜியோ போராட்டம்
/
கலெக்டர் அலுவலகம் முன் ஜாக்டோ-ஜியோ போராட்டம்
ADDED : நவ 19, 2025 04:31 AM

ஊட்டி: ஊட்டியில், ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்துக்கு ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அண்ணாதுரை, ஜெயசீலன் தலைமை வகித்தனர். சிவ பெருமாள், ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், 'காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். தொடக்க கல்வி துறையில் பணிபுரியும் 90 சதவீதத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள அரசாணை, 243ஐ ரத்து செய்ய வேண்டும்.
சரண் விடுப்பு ஒப்படைப்பு, 2025 ம் ஆண்டு ஏப்., 1ம் தேதி முதல் வழங்க வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உட்பட, 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
வருவாய், தோட்டக்கலை, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட பெரும்பாலான துறை சார்ந்த அலுவலர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் காரணமாக, அரசு ஊழியர்கள் பணிக்கு வராததால், ஊட்டி கலெக்டர் அலுவலகம் உட்பட பிற துறை அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

