ADDED : பிப் 10, 2025 07:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார் : பந்தலுாரில் புதுப்பிக்கப்பட்ட 'பைன் கோல்டு' நகை கடையை திறந்து வைத்த நடிகை ரம்யா நம்பீசன் முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
பந்தலுார், மஞ்சூர், கோத்தகிரி, குன்னுார் ஆகிய இடங்களில் 'பைன் கோல்டு' நகை கடைகள் செயல்பட்டு வருகின்றன.
பந்தலுாரில் ஏற்கனவே செயல்பட்டு வந்த கடையின், 10ம் ஆண்டை முன்னிட்டு, கடை புதுப்பிக்கப்பட்டு நேற்று திறப்பு விழா நடந்தது.
பொது மேலாளர் முத்துக்குமார் வரவேற்றார். கடை உரிமையாளர்கள் பினோய், ஷாஜன்ஜார்ஜ் தலைமை வகித்தனர்.
பிரபல நடிகை ரம்யா நம்பீசன் கடையை திறந்து வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தார். பத்து அதிர்ஷ்டசாலிகளுக்கு தங்க காயின் வழங்கப்பட்டது. வியாபாரிகள் சங்க தலைவர் அஷ்ரப், நகராட்சி தலைவர் சிவகாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

