/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் கராத்தே போட்டி; ஏழு பேருக்கு பரிசு
/
ஊட்டியில் கராத்தே போட்டி; ஏழு பேருக்கு பரிசு
ADDED : டிச 13, 2024 09:11 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி; ஊட்டியில் நடந்த தேசிய கராத்தே போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
ஊட்டி அண்ணா கலை அரங்கில், ஐக்கிய கராத்தே சங்கம் சார்பில், தேசிய அளவிலான திறந்த வெளி கராத்தே போட்டிகள் நடந்தது. அதில், பள்ளி அளவில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.
பல்வேறு பிரிவுகளின் கீழ் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற, ராகுல், நரேஷ், தோஷிக், ஜூனேஷ், முகமது ஷா, லேவியன், நவனீதன் ஆகிய ஏழு பேருக்கு மாவட்ட எஸ்.பி., நிஷா பரிசுகளை வழங்கினார். ஏற்பாடுகளை கராத்தே சங்க தேசிய இயக்குனர் நரேஷ்பாபு மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

