/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் கராத்தே போட்டி; சாதித்தவர்களுக்கு பதக்கம்
/
ஊட்டியில் கராத்தே போட்டி; சாதித்தவர்களுக்கு பதக்கம்
ஊட்டியில் கராத்தே போட்டி; சாதித்தவர்களுக்கு பதக்கம்
ஊட்டியில் கராத்தே போட்டி; சாதித்தவர்களுக்கு பதக்கம்
ADDED : நவ 12, 2024 09:55 PM

ஊட்டி ; ஊட்டியில் நடந்த, 27வது ஓபன் கராத்தே போட்டியில் சாதித்த மாணவ, மாணவியருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நீலகிரி மாவட்ட 'ஆலன் திலக் கராத்தே' பள்ளியின், 27வது ஓபன் கராத்தே போட்டி ஊட்டி அண்ணா உள் விளையாட்டு அரங்கில் நடந்தது. போட்டியை அகில இந்திய கராத்தே சங்க முன்னாள் செயலாளர் பால் விக்ரமன் துவக்கி வைத்தார். கோவையை சேர்ந்த வீரமணி, பாலசுப்ரமணி, ரினேத், பாலு, வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியில், 4 வயது முதல் முதியவர்கள் வரை நூற்றுகணக்கானோர் பங்கேற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு, 'கிளீன் குன்னுார்' அமைப்பு தலைவர் சமந்தா மற்றும் மூத்த பயிற்சியாளர்கள் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தனர். ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் பாக்கியசெல்வம். பொருளாளர் ராமகிருஷ்ணன், நிர்வாகிகள், ஜான், நித்தியா, செந்தில், நவீன், ரீட்டா ஆகியோர் செய்திருந்தனர்.